கிரிக்கெட்

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது டெஸ்டில் இங்கிலாந்தும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு களம் காணும் இவ்விரு அணியினரும் தொடரை வெல்வதற்கான வியூகங்களை தீட்டியுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் காயமடைந்த பேர்ஸ்டோவுக்கு பதிலாக ஹாரி புரூக் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். இதே போல் தென்ஆப்பிரிக்க அணியில் காயத்தால் அவதிப்படும் வான்டெர் டஸனுக்கு பதிலாக ரையான் ரிக்கெல்டன் ஆட உள்ளார்.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு