கிரிக்கெட்

முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி.. வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது

இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

தினத்தந்தி

ஈஸ்ட் லண்டன்,

தென்ஆப்பிரிக்காவில் நடந்து வரும் பெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த 3-வது லீக்கில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொண்டது.

இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஸ்மிர்தி மந்தனா 74 ரன்னும் (51 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 56 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 111 ரன்னுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. முந்தைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு