கிரிக்கெட்

“இரண்டு மோசமான இன்னிங்ஸ்களை வைத்து சாம்சனை ஜட்ஜ் பண்ணாதீங்க’’ - சிஎஸ்கே பயிற்சியாளர்

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், சாம்சன் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அணியில் இந்த சீசன் புதியதாக இணைந்துள்ள சஞ்சு சாம்சம் தொடக்க போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், சாம்சன் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சாம்சன் 6 மற்றும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவரது பார்ம் குறித்து கேள்விகள் எழுந்தநிலையில் ஸ்டீபன் பிளெமிங், சாம்சனுக்கு ஆதரவு அளித்துள்ளார். அவர் பேசுகையில், , “இது டி20 கிரிக்கெட். ஒவ்வொரு போட்டியிலும் ரன் அடிக்க முடியாது. இரண்டு மோசமான இன்னிங்ஸ்கள் வைத்து சாம்சனை ஜட்ஜ் பண்ணாதீங்க. அவர் நல்ல பார்மில் உள்ளார். விரைவில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் ’’ என்றார்.

ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கேக்கு வந்துள்ள சாம்சனிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் போட்டியில் நாண்ட்ரே பெர்கர் பந்தில் அவுட் ஆன அவர், இரண்டாவது போட்டியில் ஜேவியர் பார்ட்லெட்டிடம் விக்கெட்டை இழந்தார். இரண்டு இன்னிங்ஸ்களில் மொத்தம் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

நேற்று பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம், சிஎஸ்கே சொந்த மைதானமான சேப்பாக்கில் தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த போட்டியில் சிஎஸ்கே 210 ரன்கள் எடுத்தது. இருப்பினும் தோல்வியடைந்தது. நாளை சென்னை அணி பெங்களூருவை சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது.