கிரிக்கெட்

ஐபிஎல் - லீக் போட்டிகள் முடிவு... அதிக சிக்ஸர், பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார்?

இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சென்னை,

ஐபிஎல் 2026 தொடரின் 70 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை பிளே-ஆப் சுற்று ஆரம்பிக்க உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக அதிக சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் இளம் நட்சத்திரங்கள் மற்றும் அனுபவ வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 53 சிக்ஸர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 43 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரையான் ரிக்கெல்டன் 38 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் 36 சிக்ஸர்களுடன் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோல் பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் 62 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் 59 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.