கிரிக்கெட்

விராட் கோலி கொடுத்த பரிசு... மகிழ்ச்சியில் மிதந்த வைபவ் சூர்யவன்சி

இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக சூர்யவன்ஷி தற்போது ‘ஆரஞ்சு கேப்’ வைத்துள்ளார்.

கவுகாத்தி,

இளம் வீர வைபவ் சூர்யவன்சி தனது அபார ஆட்டத்தால் ஐபிஎல் தொடரில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக விளயாடும் அவர், பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

போட்டிக்குப் பிறகு விராட் கோலி தனது கையொப்பத்துடன் “அன்புள்ள வைபவ், மிகச் சிறப்பாக விளையாடினாய் (Dear Vaibhav, Well Done)” என எழுதப்பட்ட தொப்பியை பரிசாக வழங்கினார். அதை பெற்ற இளம் வீரர் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக சூர்யவன்ஷி தற்போது ‘ஆரஞ்சு கேப்’ வைத்துள்ளார். இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்ததாக, 13-ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

SCROLL FOR NEXT