மும்பை
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது பேட்டிங் மூலம் பந்து விச்சாளரை பயமுறுத்தக் கூடியவர். பேட்ஸ்மேனை தனது பேட்டிங்கில் இருந்து வார்த்தைகளால் பயமுறுத்தினார். ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், மெக்ராத் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களில் பந்துகளில் விளையாடியவர்.
லார்ட்ஸ், வாங்கடே , எம்.சி.ஜி போன்ற சில பிரபலமான கிரிக்கெட் அரங்கங்களில் ரசிகர்களை கிரிக்கெட் விளையாடி ரசிக்க வைத்தவர் சச்சின் தெண்டுல்கர். 2013 ஆண்டு ஓய்வு பெற்றார்.
இவர் மும்பையில் சில இளைஞர்களுடன் சாலை தடுப்பை ஸ்டெம்பாக்கி தெருவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
44 வயதாகும் சச்சின் மும்பை இந்தியன் கேப்டனாக இருந்தார். 91 பிரிமியர் லீக் போட்டிகளில் மொத்தம் 2,559 ரன்கள் குவித்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஒரு சதம் மற்றும் 14 அரைசதங்களை அடித்துள்ளார்.
Here is complete video of @sachin_rt street cricket yesterday in #Bandra pic.twitter.com/gihlljoA1O
Sachinist.com (@Sachinist) 16 April 2018