கிரிக்கெட்

கோலி, ரோகித் - ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பதில்

மைக்கேல் வாகன் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடர்ந்து பேசப்படும் ஒன்றாக உள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர் உள்ளிட்ட பலர் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஐபிஎல் வரலாற்றின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என அவர் கூறினார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாளர் பும்ராதான் எனவும் தெரிவித்துள்ளார். ரஷித் கான் மற்றும் மலிங்கா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், தாம் பார்த்ததில் மிகச்சிறந்தவர் பும்ராதான் என அவர் கூறினார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரராக விராட் கோலி 8,661 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக ரோகித் சர்மா 7,046 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.