Image Courtesy : AFP  
கிரிக்கெட்

தற்காலிக ஓய்வு எடுப்பது குறித்து வரும் தொடர் அறிவுரைகளுக்கு விராட் கோலி பதில்..!!

பல முன்னாள் வீரர்கள் கோலியை தற்காலிக ஓய்வு எடுக்க சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

மும்பை,

குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இருந்தது, இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கோலி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் 13 போட்டிகளில் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. 3 கோல்டன் டக்-களில் ஆட்டமிழந்து இருந்த அவர் ஒரு ஒரு அரைசதம் அடித்து இருந்தார்,

மேலும் சர்வதேச போட்டிகளிலும் அவர் சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் பல முன்னாள் வீரர்கள் கோலியை தற்காலிக ஓய்வு எடுக்க சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-க்கு பேட்டி அளித்த விராட் கோலி கூறுகையில், " நான் பிரேக் எடுக்க வேண்டும் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். என்னை கடந்த பல வருடங்களாக பக்கத்தில் இருந்து பார்த்தவர் ரவி பாய். என்னுடைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவர் அவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் பேசி தற்காலிக ஓய்வுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனக்கும் அணிக்கும் ஏற்ற வகையிலான சிறந்த முடிவை எடுக்க வேண்டும்" என கோலி தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்