கிரிக்கெட்

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து நியூசி. கேப்டன் கேன் வில்லியம்சன் விலகல்..?

சென்னைக்கு எதிரான போட்டியில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்ட வில்லியம்சன், கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.

சென்னைக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்டபோது கீழே விழுந்ததில் வலது கால்முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் நடையை கட்டிய அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

இதையடுத்து அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினார். வலதுகாலில் கட்டு போட்டநிலையில் கம்பூன்றியபடி அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி வைரலானது.

இந்த நிலையில், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தியாவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஒருவேளை காயம் குணமடையாத நிலையில், அவர் அணியில் இருந்து வில நேரிட்டால், டாம் லேதம் அணியை வழிநடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்