கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக் - முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு சென்ற பெங்களூரு

நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் அணியாக பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை,

2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தகுதி பெற்றுள்ளது. உ.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 6வது வெற்றியைப் பதிவுசெய்தது.

அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 37 பந்தில் 75 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 27 பந்தில் 54 ரன்னும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்