கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் மீண்டும் பாதிப்பு

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது அமிர் 3 விக்கெட்டுகளும், வஹாப் ரியாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறக்கியது. இந்நிலையில் 35-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி 35 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பக்தர் சமான் 62(75) ரன்களும், பாபர் அசாம் 48(57) ரன்களும் எடுத்திருந்தனர். இமாத் வாசிம் 22(20) ரன்களும், சதாப் கான் 1(2) ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்