கிரிக்கெட்

டி20 ஆல்-ரவுண்டர் தர வரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த ஜிம்பாப்வே கேப்டன்

ரசா, பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான சயீம் அயூப்பை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறினார்.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஐ.சி.சி. ஆடவர் டி20 ஆல்-ரவுண்டர் தர வரிசை பற்றிய விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரசா நம்பர் ஒன் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கை நாட்டின் கொழும்புவில் நடந்த ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு பிரிவிலும் ரசா சிறப்பாக விளையாடினார். 4 ஓவர்கள் சிறப்பாக வீசி குறைந்த ரன்களை கொடுத்து (17) ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் ஓமன் 103 ரன்களில் சுருண்டது. பின்னர் ஜிம்பாப்வே சிறப்பாக ஆடி வெற்றியும் பெற்றது.

இதன்மூலம் ரசா, பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான சயீம் அயூப்பை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறினார்.

ஜிம்பாப்வே அணியின் மற்றொரு வீரரான பிரையன் பென்னட் இதே போட்டியில் 48 ர சேர்த்ததுடன், டி20 பேட்டிங்கிற்கான தர வரிசையில் 2 இடங்கள் முன்னேறி 19-வது இடம் பிடித்துள்ளார்.