கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி அபாரம்!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல்-போர்ட்டோ அணிகள் மோதின.

லிவர்பூல்,

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப்-பி பிரிவின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் - போர்ட்டோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பல வாய்ப்புகள் கிடைத்தும் அவை அனைத்தையும் போர்ட்டோ அணி வீரர்கள் கோல்களாக மாற்றத் தவறினர்.

மறுமுனையில், லிவர்பூல் அணியின் தியாகோ அல்காண்டரா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தனது முதல் கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர், முகமது சலா இன்னொரு கோல் அடிக்க லிவர்பூல் அணி 2-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடிய போர்ட்டோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

போர்ட்டோ அணி லிவர்பூல் அணிக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வியும் 3 போட்டிகளை டிரா செய்தும் உள்ளது. இதுவரை அந்த அணியால் லிவர்பூல் அணியை வெற்றி பெற முடியாத சோகக்கதை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்