image courtesy: AFP 
கால்பந்து

கான்காகேப் சாம்பியன்ஸ் கோப்பை: மெஸ்சியின் இன்டர் மியாமி அணி காலிறுதிக்கு தகுதி

கான்காகேப் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நாஷ்வில்லே - இன்டர் மியாமி அணிகள் மோதின.

புளோரிடா,

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைச் சேர்ந்த கிளப் அணிகளுக்கு இடையேயான கான்காகேப் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நாஷ்வில்லே மற்றும் இன்டர் மியாமி அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெஸ்சியின் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் இன்டர் மியாமி தரப்பில் சுவாரஸ், மெஸ்சி மற்றும் டெய்லர் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். அதேவேளையில் நாஷ்வில்லே தரப்பில் சாம் சுர்ரிஜ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

இன்டர் மியாமி காலிறுதி ஆட்டத்தில் மான்டேரி அணியுடன் மோத உள்ளது. 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு