கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’

உலககோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து, பிரேசில் அணி இடையிலான ஆட்டம் ‘டிரா’ ஆனது. #FIFAWorldcup2018

ரோஸ்டோவ் ஆன்-டான்,

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன.

முன்னதாக உலககோப்பை போட்டியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இ பிரிவில் இடம்பெற்றுள்ள கோஸ்டா ரிகா - செர்பியா அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணி வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த இரண்டாவது ஆட்டத்தில் எப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி, மெக்சிகோ அணிகள் மோதின. இதில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது .

அடுத்ததாக, இரவு 11.30 மணிக்கு தொடங்கிய மூன்றாவது ஆட்டத்தில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியுடன் மோதியது.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில், பிரேசில் அணியின் சார்பில் கெளவ்டின்கோ தனது முதல் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் அணி 1 கோலுடன் முன்னிலை வகித்தது. அடுத்து நடந்த இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணியின் சார்பில் ஸ்டிவன் சூபெர் 1 கோல் அடித்து ஆட்டத்தினை சமன் செய்தார். இறுதியில் இரு அணிகளும் மேலும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்