கோப்புப்படம் 
ஹாக்கி

தென் மண்டல ஆக்கி: வருமான வரி-சேலஞ்சர்ஸ் ஆட்டம் ‘டிரா’

தென் மண்டல ஆக்கி போட்டியில் வருமான வரி-சேலஞ்சர்ஸ் ஆட்டம் ‘டிராவில் முடிந்தது.

தினத்தந்தி

சென்னை,

செயின்ட் பால்ஸ் கிளப் சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த வருமான வரி-சேலஞ்சர்ஸ் கிளப் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. வருமான வரி அணியில் சார்லஸ், அருண் குமார் தலா ஒரு கோலும், சேலஞ்சர்ஸ் அணியில் நம்பி கணேஷ், ஜீவகுமார் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இதேபோல் ஐ.ஓ.பி.-எஸ்.டி.ஏ.டி. அணிகள் இடையிலான லீக் ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஐ.ஓ.பி. அணி தரப்பில் வினோத் ராயரும், எஸ்.டி.ஏ.டி. தரப்பில் தினேஷ் குமாரும் தலா ஒரு கோல் போட்டனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் சேலஞ்சர்ஸ்-ஐ.ஓ.பி. (பிற்பகல் 2.30 மணி), வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு