ஹாக்கி

பெண்கள் ஆக்கி: இந்தியா-அர்ஜென்டினா ஆட்டம் ‘டிரா’

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக ஆடியது.

பியூனஸ் அயர்ஸ்,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக ஆடியது. உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா, 9-வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஆட்டம் பியூனஸ் அயர்சில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி தரப்பில் ராணி ராம்பால் 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணி வீராங்கனை எமிலியா பார்செரியோ கோல் திருப்பினார்.

அர்ஜென்டினா அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. 3-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக நடந்த அர்ஜென்டினா ஜூனியர் அணிக்கு எதிரான ஆட்டங்களை 2-2, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து இருந்த இந்திய அணி 1-2, 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா பி அணியிடம் தோல்வி கண்டு இருந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு