விளையாட்டு

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி 10-வது வெற்றி

லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா அணி தனது 10-வது வெற்றியை பதிவு செய்தது.

மாட்ரிட்,

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, அட்லெடிகோ மாட்ரிட் அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை சாய்த்தது. பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 86-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். 14-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். ஒரு டிரா 3 தோல்வி கண்டுள்ள பார்சிலோனா அணி 31 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்