கோப்புப்படம்  
பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - ஸ்ரீகாந்த், பிரனோய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த், பிரனோய் வெற்றிபெற்றனர்.

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நட் குயெனுடன் மோதினார்.

இதில் கிதாம்பி 22-10, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல், மற்றொரு வீரரான ஹெச்.எஸ்.பிரனோய், ஆஸ்திரியா வீரர் லூகா விராபருடன் மோதினார். இதில் பிரனோய் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்