பிற விளையாட்டு

பார்வையற்றோருக்கான செஸ் போட்டி: விருதுநகர் வீரர் முதலிடம்

பார்வையற்றோருக்கான செஸ் போட்டியில், விருதுநகர் வீரர் முதலிடம் பிடித்தார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் பார்வையற்றவர்களுக்கான மாநில செஸ் போட்டி சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் 2 நாட்கள் நடந்தது. 7 ரவுண்ட் கொண்ட இந்த போட்டியில் 52 பேர் கலந்து கொண்டனர். இதில் 6.5 புள்ளிகளுடன் விருதுநகரைச் சேர்ந்த மாரிமுத்து முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். அவருக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை 5 புள்ளியுடன் ஹரிகரன் காந்தியும் (தஞ்சாவூர்), 3-வது இடத்தை 4.5 புள்ளியுடன் செல்வகுமாரும் (திருவண்ணாமலை) பெற்றனர். பரிசுகளை இந்தியன் வங்கி பொது மேலாளர்கள் நாகராஜன், பி.சி.தாஸ் ஆகியோர் வழங்கினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு