பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது.

புஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 7வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஹீ பிங்ஜியாவை எதிர்கொண்டார். 1 மணி 9 நிமிட நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 1721, 2117, 1521 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆண்டில் ஹீ பிங்ஜியாவுக்கு எதிராக சிந்து சந்தித்த 3வது தோல்வி இதுவாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 1421, 1421 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் ஷோ டியான் சென்னிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டிசிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்