Image Courtesy: ANI Twitter 
பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

தினத்தந்தி

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான (71 கிலோ) பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்நாட்ச் பிரிவில் 93 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 119 கிலோவும் மொத்தம் (119+93) மொத்தம் 212 கிலோ தூக்கி அசத்தினார்.

இவர் வென்ற பதக்கத்தையும் சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது