கோப்புப்படம்  
பிற விளையாட்டு

உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் எகிப்து-மலேசியா அணிகள் இன்று பலப்பரீட்சை

மலேசியாவுக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

சென்னை,

4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்து அணி 4-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரைஇறுதியில் மலேசியா அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியில் அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் எகிப்து-மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்தியா, ஜப்பான் அணிகள் இணைந்து 3-வது இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடைபெறும் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-கொலம்பியா, 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஹாங்காங்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு