பிற விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி, சாய்னா தோல்வி

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், சிந்து வெற்றிபெற்றார். மற்றோரு போட்டியில் சாய்னா தோல்வியடைந்தார்.

கோவ்லூன்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ஜின்டாபோலை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் போராடி வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 21-15 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்டை விரட்டியடித்தார். சமீர் வர்மா, பிரனாய் ஆகியோரும் தங்களது ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். அதே சமயம் இந்தியாவின் சாய் பிரனீத், காஷ்யப் ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்