1956-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வாகை சூடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற நந்து நடேகர் 100-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர், இந்திய பேட்மிண்டன் சங்கம் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.