பிற விளையாட்டு

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

தினத்தந்தி

நுர் சுல்தான்,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ககஜஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான கிரிகோ ரோமன் பிரிவில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் குர்பிரீத் சிங் 1-3 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செர்பியாவின் விக்டோர் நெம்சிடம் போராடி வீழ்ந்தார். 60 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் மனிஷ் 0-10 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள மால்டோவா வீரர் விக்டர் சிபானுவிடம் தோல்வி கண்டார். 130 கிலோ எடைப்பிரிவில் தகுதி சுற்றில் இந்திய வீரர் நவீன், பான் அமெரிக்கன் சாம்பியன் ஆஸ்கார் பினோ ஹின்ட்சை (கியூபா)சந்தித்தார். இதில் நவீன் 0-9 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். அவரை வீழ்த்திய ஆஸ்கார் பினோ ஹின்ட்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் வெண்கலப்பதக்கம் வரை முன்னேற வாய்ப்புள்ள ரிபிசேஜ் பிரிவில் நவீனுக்கு மற்றொரு வாய்ப்பு கிட்டியது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை