பிற விளையாட்டு

இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான 125 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் சுமித் மாலிக் 10-5 என்ற புள்ளி கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் ரஸ்தன் இஸ்கந்தாரியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெனிசுலாவின் ஜோஸ் டியாஸ் ராபெர்டியை வீழ்த்திய சுமித் மாலிக் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இறுதிபோட்டிக்கு முன்னேறியதன் மூலம் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். 97 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் சத்யவார்த் காடியன், பல்கேரியாவின் அகமது பாதவ்விடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மல்யுத்தத்தில் தகுதி பெற்ற 7-வது இந்தியர் சுமித் மாலிக் ஆவார். ஏற்கனவே இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா (57 கிலோ), பஜ்ரங் பூனியா (65 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), வீராங்கனைகள் வினேஷ் போகத் (53 கிலோ) அன்ஷூ மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு