பிற விளையாட்டு

காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றார்

காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றுள்ளார். #CWG2018

கோல்டு கோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் நேற்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார்.

இதேபோன்று ஆடவருக்கான 85 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால் இந்தியாவின் தங்க பதக்க எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் பிரிவில் 69 கிலே எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் இன்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு