Image Tweeted By ProKabaddi 
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: அர்ஜுன் தேஷ்வால் அபாரம்- யு மும்பா அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர்

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின.

தினத்தந்தி

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி 32-22 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி தரப்பில் அபாரமாக விளையாடிய அர்ஜுன் தேஷ்வால் 1 போனஸ் புள்ளி உட்பட 13 புள்ளிகளை குவித்து அசத்தினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது