பிற விளையாட்டு

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் தோல்வி

84-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் ஆடின.

தினத்தந்தி

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் அணி 32-31 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. தமிழ் தலைவாசுக்கு இது 9-வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8.30 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்- தமிழ் தலைவாஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது