கோப்புப்படம் 
பிற விளையாட்டு

உலக சாம்பியனை வீழ்த்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பாராட்டிய அஸ்வின்

மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியபிரக்ஞானந்தாவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில்  16 வீரர்கள் பங்கேற்றனர். இதன் எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறும்போது, 

உலக சாம்பியனை தோற்கடித்தது என்ன ஒரு சாதனை. இது முழு நாட்டிற்கும் பெருமை அளிக்கிறது" என்று அஸ்வின் டுவீட் செய்துள்ளார்.". 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது