பிற விளையாட்டு

காமன்வெல்த் 2018: தமிழகத்தைச்சேர்ந்த சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. #CWG2018

கோல்டுகோஸ்ட்,

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று முன் தினம் தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த போட்டிகளில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. தங்கபதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் தமிழகத்தைச்சேர்ந்தவர் ஆவார். வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த முறை ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

2018 காமன்வெல்த் போட்டியில், தற்போது வரை இந்தியா 3 தங்கம் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு