கோப்புப் படம் 
பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து போட்டி: சங்கம் அணி வெற்றி

16-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் மாநகராட்சி திடலில் நடந்து வருகிறது.

சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 16-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்து வருகிறது.

இதில் 'நாக்-அவுட்' சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., லயோலா, எஸ்.டி.ஏ.டி. அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், இந்துஸ்தான், சங்கம் கிளப், கேமிலஸ் அணிகளும் அரைஇறுதி லீக் சுற்றுக்கு முன்னேறின.

நேற்று நடந்த பெண்கள் பிரிவு அரைஇறுதி லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் ரைசிங் ஸ்டார் அணி 58-54 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் ஜாமெர்சை வீழ்த்தியது. ரைசிங் ஸ்டார் அணியில் ஸ்ருதி 14 புள்ளியும், அமிர்தா, ரவீனா தலா 12 புள்ளியும் எடுத்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் சங்கம் கிளப் 74-69 என்ற புள்ளி கணக்கில் கேமிலஸ் அணியை சாய்த்தது. சங்கம் அணியில் நீதா 21 புள்ளியும், ரோசி கீர்த்தனா 17 புள்ளியும் சேர்த்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்