கோப்புப்படம்  
பிற விளையாட்டு

மாநில நீச்சல் போட்டி: சென்னை வீரர் தனுஷ் புதிய சாதனை

சென்னை வீரர் தனுஷ் 29.23 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.

சென்னை,

76-வது மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பந்தயத்தில் சென்னை வீரர் தனுஷ் 29.23 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.

இதேபோல் அவர் 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பந்தயத்தில் (2 நிமிடம் 21.60 வினாடி) தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையுடன் முதலிடத்தை தன்வசப்படுத்தினார்.

100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் சென்னை வீரர் டி.ஆதித்யா 56.93 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி புதிய சாதனையுடன் முதலிடத்தை கைப்பற்றினார். 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் நெல்லை வீரர் பெனடிக்டன் ரோகித் 25.47 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். இந்த போட்டி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்