பிற விளையாட்டு

பெண்கள் உலகக் கோப்பை கபடி: இந்தியா-ஈரான் இன்று மோதல்

அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-ஈரான், சீன தைபே-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

டாக்கா,

11 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 39-31 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்தது. இதேபோல் பி பிரிவில் நடந்த இறுதி லீக் ஆட்டம் ஒன்றில் சீன தைபே அணி 63-28 என்ற புள்ளி கணக்கில் போலந்தை பந்தாடியது.

லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இந்தியா (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், பி பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-ஈரான், சீன தைபே-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு