கோப்புப் படம் 
பிற விளையாட்டு

பெண்கள் கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்..!

பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி., ஐ.சி.எப்., தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், ஜி.கே.எம்., பாரதியார் ஆகிய 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் லேடி சிவசாமி, வேலம்மாள், டி.ஏ.வி. உள்பட 8 அணிகளும் கலந்து கொள்கின்றன.

பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், பள்ளிகள் பிரிவில் 'டாப்-4' இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த தகவலை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன் தலைவர் வீரமணி, லேடி சிவசாமி பள்ளி முதல்வர் ரூபி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்