டென்னிஸ்

ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ்: பெடரரை வீழ்த்தினார், நிஷிகோரி

ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் போட்டியில், பெடரரை வீழ்த்தி நிஷிகோரி வெற்றிபெற்றார்.

லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஹெவிட் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-9-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் மோதினார்கள். 1 மணி 27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் பெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.

குயர்டன் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-6 (7-5), 7-6 (7-1) என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 6 நிமிடம் நீடித்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு