image courtesy; twitter/@AustralianOpen 
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி அளித்த சின்னர்

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் - சின்னர் மோதினர்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), ஜானிக் சின்னர் (இத்தாலி) உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சின்னர் ஜோகோவிச்சிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார். முதல் 2 செட்டுகளை எளிதில் கைப்பற்றிய சின்னர், 3-வது செட்டில் டை பிரேக்கர் வரை போராடி அதனை இழந்தார். இருப்பினும் 4-வது செட்டில் எழுச்சி பெற்ற அவர் அதனை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இந்த போட்டியில் சின்னர் 6-1, 6-2, 6-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு