டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்: வோஸ்னியாக்கி ‘சாம்பியன்’

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்று, ரூ.11 கோடியை பரிசாக பெற்றார்.

தினத்தந்தி

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் அனஸ்டசிஜா செவஸ்தோவாவை (லாத்வியா) எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வோஸ்னியாக்கி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் செவஸ்தோவாவை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் 1 மணி 27 நிமிடங்கள் நடந்தது. இந்த தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் அசத்திய வோஸ்னியாக்கிக்கு ரூ.11 கோடி பரிசுத்தொகையுடன் 1,000 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. இது அவரது 30-வது சர்வதேச பட்டமாகும். 2-வது இடம் பிடித்த செவஸ்தோவாவுக்கு ரூ.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது