டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; காயத்துடன் விளையாடி சாம்பியனான அமெரிக்க இளம் வீரர்

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி அமெரிக்க இளம் வீரர் டெய்லர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தினத்தந்தி

கலிபோர்னியா,

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் விளையாடினர்.

இவர்களில், காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் போட்டியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். எனினும், இந்த போட்டியை தைரியமுடன் எதிர்கொண்டு விளையாடிய அவர், தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.

21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6-3 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதனால், 2வது செட்டை கைப்பற்றுவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது.

எனினும், அடுத்தடுத்து அதிரடியாக விளையாடி அடுத்த செட்டையும் அவர் கைப்பற்றினார். இந்த போட்டியில் 6-3, 7-6 (7/5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று டெய்லர் சாம்பியன் ஆனார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது