Image Courtesy: AFP  
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை தோல்வி

முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

கலிபோர்னியா,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மத்தேயு எப்டன் இணை பெல்ஜியத்தின் ஜோரன் விலீஜென், சாண்டர் கில்லே இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-7 (1-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்த போபண்ணா இணை 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 8-10 என்ற புள்ளிக்கணக்கில் போபண்ணா இணையை வீழ்த்தியது. இறுதியில் போபண்ணா இணை 6-7 (1-7), 6-4, 8-10 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெல்ஜியத்தின் ஜோரன் விலீஜென், சாண்டர் கில்லே இணை அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு