டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்று வரலாறு படைத்த ரபேல் நடால்!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2ம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ்(ரஷியா) ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் மற்றும் இரண்டாவது செட்டை மெட்வடேவ் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை நடால் வென்றார்.

இதனால் சாம்பியன் ஆகப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது செட் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.இந்நிலையில், 5வது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் நடால்.

5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இறுதி போட்டியில், அவர் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வடேவை வீழ்த்தினார்.

இதன்மூலம், உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 35 வயதான ரபேல் நடால் 21வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு