டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

சபலென்கா காலிறுதியில் கின்வென் ஜெங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

தினத்தந்தி

நியூயார்க்

ஆண்டின் கடைசி 'கிராண்ட்ஸ்லாம்' ஆன அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) உடன் மோதினார்.

இதில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இவர் காலிறுதியில் கின்வென் ஜெங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு