டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வோஸ்னியாக்கி போராடி வெற்றி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வோஸ்னியாக்கி போராடி வெற்றிபெற்றார்.

தினத்தந்தி

சிங்கப்பூர்,

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒயிட் பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த நடப்பு சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். இந்த ஆட்டம் 2 மணி 19 நிமிடங்கள் நீடித்தது. 2-வது தோல்வியை தழுவிய கிவிடோவா இனி அடுத்த சுற்றை எட்டுவது கடினம் தான். மற்றொரு ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு