இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தை இயக்கி இருந்தேன். தற்போது சாய்குமார் நடிப்பில் இந்த படம் ஒன் பை டூ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனது உழைப்பையும், கற்பனையையும் திருடும் செயலாக இது இருக்கிறது.
இதுபோல் பல படங்களுக்கு கதை திருட்டு நடந்து வருகிறது. தாதா 87 படம் ரீமேக் செய்யப்படுவதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.