* வீட்டின் தலை வாசல் அமைப்புக்கு ஜோதிட ரீதியாக லக்னம் அல்லது நான்காம் இடம் அல்லது அதன் அதிபதி குறிப்பிடும் திசையில் அவர்களது பலத்தை பொறுத்து ஒருவரது சொந்த வீட்டின் தலைவாசலை அமைக்க வேண்டும் என்பது பொது விதியாகும்.
* மேற்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகள் ஒருவருக்கு ஏற்றதாக அமைந்து அப்பகுதிகளில் தலைவாசல் கொண்ட வீடுகளில் வாஸ்து சம்பந்தமான விதிகளை கச்சிதமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.