மும்பை

டெம்போ டிரைவரை அடித்து கொன்ற வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டெம்போ டிரைவரை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத், 

உல்லாஸ்நகர் கேம்ப் 1-ம் நம்பர் பகுதியில் சம்பவத்தன்று இரவு 12.30 மணி அளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று டெம்போவை முந்தி சென்றது. சிக்னல் காரணமாக முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே நின்றது. அப்போது, பின்னால் வந்த டெம்போ மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கரண் (வயது29) என்பவர் டெம்போவை ஓட்டி வந்த சோனு (22) என்பவரை சாலையின் நடுவழியில் பிடித்து சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே டெம்போ டிரைவர் சோனு பலியானார்.

இதனால் கரண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த உல்லாஸ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற கரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்