கால்நடை மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

கால்நடை மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க இருப்பதாக கால்நடை நலத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Published on

புதுச்சேரி

புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறையில் காலியாக உள்ள 16 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதுவை அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் https://ahd.py.gov.in/recruitments என்ற வலைதள முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் கால்நடை மருத்துவ பட்டதாரிகள் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்கள் மற்றும் தேவையான இணைப்புகளுடன் வருகிற ஆகஸ்டு 8-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com