

சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன் படி கொண்டவர் விரைவான முடிவெடுக்கும் திறன் கொண்டவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோகஸ்தர்களுக்கு:மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு குறித்த சுட்டுமொழி கிடைக்கலாம். புதிய பொறுப்புகள் நம்பிக்கையை உயர்த்தும்.
வியாபாரிகள்:
வியாபாரிகளுக்கு லாபம் மிதமான உயர்வு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. பணவரவுக்கு பங்கமில்லை.
குடும்பத் தலைவிகள்:
குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் நீண்டநாள் நிலுவையில் இருந்த விஷயங்கள் இம்மாதம் முடிவுக்கு வரும். கணவர்–பிள்ளைகள் உறவில் புரிதல் அதிகரிக்கும். சொத்து/வீட்டு அலங்காரத்தில் சிறிய முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள்:
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும் காலம். படைப்புகளில் புதுமை பாராட்டைப் பெறுவீர்கள். உங்களுக்கு திருப்பம் கொண்ட மாதமாக அமைகிறது. வெளிநாட்டு தொடர்புகள் அமையும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு கவனம் சிதறாமல் படித்தால் உயர்ந்த மதிப்பெண் பெறுவீர்கள். போட்டித் தேர்வில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆசிரியர் ஆதரவு உறுதி.
பரிகாரம்:
திங்கள் கிழமை அன்று அங்காள பரமேஸ்வரிக்கு பொங்கல் வைத்து படைப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
சட்டென்று சீக்கிரம் கோபம் வந்துவிடும் குணமுள்ளவர் நீங்கள் பொறுமையுடன் இருந்தால் வெற்றி உங்களுக்குத்தான்.
சிறப்புப் பலன்கள்
உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை கூடும் ஆனால் அதற்கேற்ப பலன் உறுதியாக கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்னும் சிலருக்கு இடமாற்றம் குறித்து யோசனை உண்டாகும்.
வியாபாரிகள்:
வியாபாரிகளுக்கு அதிக முதலீட்டினால் தங்கள் லாபம் கூடும். நிலம் மற்றும் வீடுகள் போன்ற ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் துறையில் தங்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும். பழைய கடன் வசூலாகும்.
குடும்பத் தலைவிகள்:
குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு கூடிவரும். ஒரு சிலர் ஆடை ஆபரணச் சேர்க்கை நிகழும்.
கலைஞர்கள்:
கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். உங்கள் பெயர் பட்டி தொட்டியெல்லாம்–புகழ் உயரும். ஒரு சிலருக்கு பெரிய கதாபாத்திரம் கிடைக்கும்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு மன அமைதியை வரவழைக்க தியானத்தை மேற்கொள்ளவும். இது தங்களின் நினைவாற்றல் மேம்படவும் படிப்பில் கவனம் செலுத்த உதவும். வெளிநாட்டு கல்வி வாய்ப்பு உண்டாகும். பெற்றோரின் ஆதரவு உண்டு.
பரிகாரம்:
பெண்கள் வெள்ளிக் கிழமை அன்று அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்லி வழிபடுவது மிகவும் நல்லது.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
யோசிக்காமல் செயல்படும் பழக்கம் கொண்டவர் நீங்கள். சிந்தித்து செயல்பட்டால் தங்களுக்கு தோல்வி பயம் இல்லாமல் போகும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்கள்:
வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு உண்டு. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நிலையில் கவனம் தேவை.
வியாபாரிகள்:
வியாபாரிகளுக்கு உங்களுக்கு போட்டியாக இருந்து கொண்டு தொல்லை கொடுத்து வந்தவர்கள், இனி நம்மால் வீம்புக்கு இரையாக முடியாது என அவர்களாகவே முடிவெடுத்து, தங்கள் வியாபார நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வார்கள்.
குடும்பத் தலைவிகள்:
அடகு வைத்திருந்த நகைகளை மீட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே சுமூகமான மனநிலை நிலவி குடும்ப முன்னேற்றத்திற்குப் பல திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். கை, கால்களில் வலி வந்து போகும்.
கலைஞர்கள்:
உங்களுக்கென்று திரைப்படத் துறையில் தனி இடம் இருக்கும் என்பதை இந்த மாதம் உணருவீர்கள். சின்னத்திரை மற்றும் சினிமாக்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. முன்பை விட கூடுதல் சம்பளத் தொகை வாங்குவீர்கள்.
மாணவர்கள்:
இந்த மாதம் கிரக நிலை சாதகமாக இருப்பதால் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற இயலும். இருப்பினும் மாணவர்கள் பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது.
பரிகாரம்:
செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
ஒரே விஷயத்தில் நிலைத்திருக்க முடியாமை இதுதான் தங்கள் பலவீனம். ஆதலால், தியானம் மேற்கொண்டால் தங்களின் மனம் ஒருநிலைபடும்.
சிறப்புப் பலன்கள்
உத்தியோகஸ்தர்கள்:
அலுவலகத்தில் தங்களுக்கு தரவேண்டிய பாக்கித் தொகைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும்.
வியாபாரிகள்:
வியாபாரம் செய்யும் பெண்கள் தங்களுக்கு அலைச்சல்கள் கூடி உடல் ஆரோக்கியம் குறைவு ஏற்படலாம். ஆதலால், உடல் நலத்தில் அக்கறைக் கொள்வது நல்லது.
குடும்பத் தலைவிகள்:
குடும்பத்துடன் சிறுபயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். விருந்து, விழா என கலந்து கொள்வீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் அதிகமான இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கலைஞர்கள்:
கலைஞர்கள் தங்கள் சக கலைஞர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் நீங்கள் அதிக கவனம் செலுத்துவது, உங்கள் வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்கப் பெரிதும் உதவும்.
மாணவர்கள்:
மாணவர்கள் தாங்கள் மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. அப்பொழுதுதான் தேர்வின் போது தங்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும்.
பரிகாரம்:
வயது முதிர்ந்தவருக்குச் இயன்ற உதவிச் செய்யுங்கள். காகத்திற்கு உணவு வைத்து விட்டு சாப்பிடுவது மிக்க நன்று.