இன்றைய ராசிபலன் (07.06.2026): திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய ராசிபலன் (07.06.2026): திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும்..!
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : ஞாயிறு கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: வைகாசி

நாள்: 24

ஆங்கில தேதி: 7

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று அதிகாலை 04-47 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி: இன்று இரவு 11-12 வரை சப்தமி பின்பு அஷ்டமி.

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 07-30 to 8-30

நல்ல நேரம்: மாலை 3-30 to 4-30

ராகு காலம்: மாலை 4-30 to 6-00

எமகண்டம்: காலை 12-00 to 1-30

குளிகை: காலை 3-00 to 4-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் ஞாபகத்திறன் அபாரமாக செயல்படும். பணம் பல வழியிலும் வந்து சேரும். இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வீர்கள். பெண்களின் சேமிப்பு உயரும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்-

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். அத்தியாவசிய தேவை நிறைவேறும். தம்பதிகளின் கனவு நனவாகும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். நவீன கணினி வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தங்களை வந்தடையும். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

தேகம் பொலிவு பெறும். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். சேமித்த பணத்தில் தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற விசயத்திற்கு முக்கியத்துவம் தராதீர்கள். கணவன் மனைவி உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கடகம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும். அரசு வேலைகள் சாதகமாகும். உத்யோகத்தில் தங்களுக்கெதிராக செயல்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உதவுவர். திடீர் பணவரவு ஆனந்தத்தைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீட்டினை அழகாக கட்டிமுடிப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உத்யோகஸ்தர்களுக்கு இட மாற்றம் உண்டாகும் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். மூளை சுறுசுறுப்படையும். உடல்நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர். நல்ல விசயங்களில் திருப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்

புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாப்பக்கம் வரும். குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம். எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும் மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. சுப விசேஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வீர்கள் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

யாருக்கும் ஜாமின் கையெழுத்துப் போட வேண்டாம். பணவரவு நன்றாக இருக்கும். அரசு விசயங்களில் ஆதாயம் உண்டு. மருத்துவர்கள் சாதனை படைப்பர். முதியோர்கள் பிரார்த்தனை நிறைவேறும். பிள்ளைகள் நன்கு படிப்பர். சொகுசுகாரில் பயணம் உண்டாகும். அந்த பயணத்தால் வெற்றிகள் குவியும்..குடும்பத்தில் மகிழ்ச்சியில் திளைப்பர். தேவையற்ற பயம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்- அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிரடியான முயற்சிகள் வெற்றி தரும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டு. இரும்பு தொழிலில் லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மகரம்

வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து செய்வீர். புதிய வீட்டிற்கு குடிபுகுவர். அலுவலகத்தில் வேலைபளு குறையும். பழைய கடன்பாக்கி தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். மனைவியின் முன்னேற்றத்தில் பங்களிப்பீர்கள். வியாபாரத்தின் சூட்சுமத்தை அறிவீர்கள். மாணவர்கள் பொறுப்புணர்ந்து கல்வி கற்பர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். விரும்பிய நாட்டின் விசா கிடைக்கும். திடீர் பணவரவு மகிழ்ச்சியைத் தரும்.மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்வர். புதிய நபர்களிடம் கவனம் மிக அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். எதிரிகள் விலகுவர். கொடுக்கல் வாங்கல் சிறக்கும். தம்பதிகளின் சந்தேகம் தீரும். சளித் தொந்தரவு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

எதிரிகள் சரணடைவர். பிள்ளைகள் நன்கு படிப்பர். நீண்ட நாட்களாக தர வேண்டிய கடன்கள் பைசலாகும்.சேமிப்பு அதிகரிக்கத் துவங்கும். காதலர்கள் ஒன்று சேருவர். தம்பதிகள் அன்பில் திளைப்பர். வியாபாரத்தில் ஈடுபாடு கூடும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். அலைச்சல்களால் அசதி ஏற்படும். சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

X

Daily Thanthi
www.dailythanthi.com